தமிழக அரசியலில் அவ்வ போது புதிய முகங்கள் அரசியலுக்கு வருவது புதியது அல்ல. ஆனால் அந்த வருகை மக்களின் எதிபார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது. சமீபத்தில் நடிகர் Vijay அரசியல் களத்தில் இறங்கி உள்ள நிலையில், அவரது அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமா இயக்குனர் சேரன் வெளிபடுத்திய கருத்து சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாரி உள்ளது.
ஒரு புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தால் மட்டும் போதாது, அந்த கட்சி மக்களிடம் என்ன வாக்குறுதி அளிக்க போகிறது, அதனை எவ்வாறு செயல்படுத்த போகிறது, நாட்டில் என்ன மாற்றங்களை கொண்டு வர போகிறது என தெளிவாக சொல்லபட வேண்டும், இது தான் ஒரு உண்மையான அரசியல் தலைவரின் அடையாளம்.
இயக்குனர் சேரன் தனது கருத்தில் ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார்: “மக்களிடம் ‘உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? இல்ல நான் வேண்டுமா?’ என்று கேட்பது மட்டும் ஒரு நாட்டை ஆள தகுதியாக போதுமா?”
இந்த கேள்வி வெறும் விமர்சனம் அல்ல; இது பொது மக்களின் உண்மையான சந்தேகமாகும். அரசியல் என்பது சினிமா அல்ல. இங்கு கவர்ச்சி, ரசிகர்கள், டயலாக் – all this are secondary. முதன்மையாக இருக்க வேண்டியது கொள்கை, திட்டம், மக்கள் நலன்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கி வருகிறது. அதில் சில கட்சிகள் நேரடியாக அரசியல் களத்தில் இருந்து வருகின்றது. இத்தகைய சூழலில்,புதியதாக வரும் ஒருவர், தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவர் என நிரூபிக்க வேண்டியது அவசியம்.
மக்கள் இன்று விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பது மிக எளிமையானது.
- உங்கள் கொள்கை என்ன?
- உங்கள் திட்டங்கள் என்ன ?
- எங்கள் பகுதியின் பிரச்சனைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
- அதை எப்படி தீர்க்க போகிறீர்கள்?
இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்காமல், வெறும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகள் மட்டும் பேசினால், அது நீண்ட கால அரசியலில் நிலைத்து நிற்காது.
சேரன் மேலும் வலியூரத்தியது:
“மக்களோடு நின்று, அவர்களோடு போராடி, அவர்களின் வலியை உணர்ந்தவர்களே உண்மையான தலைவர்கள்.”
இது மிகவும் முக்கியமான கருத்து. ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்றால், மக்கள் வாழ்க்கையில் நேரடியாக ஈடுபட வேண்டும். வெறும் மேடை பேச்சுகள், அல்லது சினிமா புகழ் மட்டுமே போதாது.
மேலும், அவர் ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார்:
“தமிழகம் ஏற்கனவே 50 ஆண்டுகளை இழந்துவிட்டது. இனிமேல் மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது.”
இந்த வரிகள், மக்கள் மனநிலையை பிரதிபலிக்கின்றன. அவர்கள் இப்போது மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அந்த மாற்றம் உண்மையானதாக இருக்க வேண்டும், வெறும் பெரியரளவிலான மாற்றமாக இருக்க கூடாது.
இன்றைய இளைஞர்கள் அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு நல்ல தலைமையை எதிரபார்க்கிறார்கள். அவர்களை வழிநடத்த கூடிய நேர்மையான, தெளிவான பார்வையுள்ள தலைவர்கள் தேவைபடுகிறது.
அதற்காக, புதியதாக அரசியலுக்கு வரும் அனைவரும் – முக்கியமக பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டவர்கள்- தங்கள் பொறுப்பை உணர வேண்டும். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்க கூடியது.
இறுதியாக, இந்த விவாதம் ஒரு முக்கியமான உண்மையை நமக்கு நினைவூட்டுகிறது:
- அரசியல் என்பது போட்டி அல்ல, பொறுப்பு.
- மக்கள் ஓட்டு என்பது உணர்ச்சி அல்ல, நம்பிக்கை
அந்த நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டுமானால், கவர்ச்சி மட்டும் போதாது. கடின உழைப்பு, தெளிவான கொள்கை, மற்றும் மக்கள் நலன் மீது உண்மையான அக்கறை அவசியம்.
