Site icon Natshathiram

மு. க. ஸ்டாலின் திறந்த புதிய மிட்சுபிஷி தொழிற்சாலை – ரூ. 2000 கோடி முதலீட்டில் 2000 பேர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழந்து வருகிறது. அந்த வரிசையில், ஜப்பான் நாட்டை சார்ந்த உலகப் புகழ் பெற்ற மின்சாதன நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா ( Mitsubishi Electric India ) தனது புதிய மேம்பட்ட உற்பத்தி நிலையத்தை சென்னையில் இன்று தொடங்கியது.

Mk stalin

சென்னைக்கு மிக அருகிலுள்ள கும்மிடிபூண்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று ( 06.02.2026 ) புதிய தொழிசாலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கும்மிடிபூண்டியில் புதிய தொழிற்சாலை

இந்த புதிய தொழிற்சாலை கும்மிடிபூண்டியில் அமைந்துள்ள “Origins by Mahindra” என்ற தொழிற்சாலை பூங்காவில் அமைக்கபட்டுள்ளது. சென்னை துறைமுகம் மற்றும் முக்கிய போக்குவரத்து வசதிகளுக்கு அருகில் அமைந்து இருப்பதால், சர்வதேச அளவில் உறுபத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ளது. இந்த புதிய தொழிற்சாலை மூலம் தமிழநாட்டில் தொழிற்துறை வளர்ச்சிக்கு இவை மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏர் கண்டிஷனர் (Airconditioner மற்றும் Compersor ) கம்பரசர்

இந்த புதிய உற்பத்தி மையம் முக்கியமக ஏர் கண்டிஷனர் மற்றும் கம்பரசர் ஆகியவற்றை உற்பத்தி செய்ய நிறுவபட்டுள்ளது. இது உள்நாட்டு சந்தைக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய சந்தைகளுக்கும் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யபடுகின்றன. இது தரமான உற்பத்தி மற்றும் உயர் செயல்திறன் கொண்ட செயலபமுறையை பின்பனற்றும் வகையில் உருவாக்கபட்டுள்ளது.

ரூ., 2000 கோடி முதலீட்டில் புதிய வேலைவாய்ப்பில் முன்னேற்றம்

மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் இந்த புதிய திட்டத்திறக்கு ரூ.2000 கோடிகக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழநாட்டில் மேலும் தொழிற்துறை முதலீடுகள் அதிகரிக்கும் மட்டுமில்லாமல், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவியாய் இருக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் 2000 க்கும் மேற்ப்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள், தமிழக இலைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

தமிழ்நாடு – முதலீட்டார்களின் தேர்வுகள்

தமிழ்நாடு அரசு தொடர்ந்து முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு சீரான தொழில், திறமையான இளைஞர்கள், நவீன உட்கட்டமைப்பு ஆகிய காரணங்களால் உலகளாவிய நிறுவனங்கள் தமிழநாட்டை முதலில் தேர்வு செய்கின்றனர். மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த முதலீடு தமிழ்நாடு மாநிலத்தின் உலகளாவிய நம்பிக்கையை உறுதி செய்கிறது.

‘Invest in TamilNadu’ முயற்சிக்கு இது புதிய பலம்

இந்த திட்டம், தமிழ்நாடு அரசின் “Invest in Tamilnadu” முயர்ச்சிக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. சர்வதேச தரத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகுவது, மாநிலத்தின் பொருளதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி திறன் அதிகரிக்கவும் பெரும் பங்களிப்பாக இருக்கும். குறிப்பாக, உற்பத்தி துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலகமாக மாறும் முயர்ச்சிக்கு இது உதவியாக இருக்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் தொழிநுட்ப மேம்பாடு

இந்த புதிய தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழிநுட்பங்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. சேமிப்பு முறைகள், குறைந்த மாசு உமிழ்வு போன்ற அம்சங்கள் இதில் இணைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாரக்கபடுகிறது.

உள்ளூர் பொருளாதாரத்திறக்கு புதிய ஊக்கம்

இந்த புதிய உற்பத்தி மையத்தினால், கும்மிடிபூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கூடுதல் வாய்ப்பு உண்டாகும். போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், உபகரணங்கள், சேவைத் துறைகள் போன்ற பல்வேறு துறைகளும் வளர்ச்சி பெரும். இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேலும் வலு பெரும்.

தமிழநாட்டின் தொழிற்துறை எதிர்க்காலம்

மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த புதிய முதலீடு, தமிழநாட்டின் தொழிற்துறை வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பாரக்கபடுகிறது. உலகளாவிய நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்வது, மாநிலத்தின் தொழிற்துறை கொள்கை மற்றும் உள்கட்டமைப்பின் வலிமையை இது வெளிபடுத்துகிறது. எதிர்காலத்தில் மேலும் பல தொழிற்துறை முதலீடுகள் தமிழநாட்டுக்கு வரும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

Exit mobile version