Cricket

india vs usa t20 world cup 2026 : SuryaKumar Yadav அதிரடியால் இந்தியா 29 ரன்கள் வெற்றி!

ICC T20 World Cup 2026 தொடரில் இந்தியா தனது முதல் போட்டியிலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வெற்றியை பதிவு செய்தது. நேற்று (07.02.2026) மும்பையில் நடைபெற்ற இந்த முக்கியமான Group stage போட்டியில் usa அணியை இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

ஆட்டத்தின், ஆரம்பத்தில் இந்தியா இக்கட்டான சூழலில் இருந்த போது, கேப்டன் சூர்யகுமார் யாதவின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவை பாதுக்கப்பான ஸ்கோர்க்கு கொண்டு சென்றது. பின்னர் இந்திய அணியின் பொறுப்பான பந்து வீச்சால் USA அணியை கட்டுபடுத்தி எளிதில் வெற்றியை கண்டது.

default_layout
SuryaKumar Yadav

India vs USA அணியின் போட்டி சுருக்கம் ( Match Summary )

  • இடம் (place ) : மும்பை
  • தொடர் : ICC T20 World Cup 2026
  • இந்தியா : 161/9 (20 ஓவர்
  • USA : 132/8 (20 ஓவர்)
  • முடிவு (Final ) : இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

போட்டியின் ஆரம்பத்தில் இந்தியா நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியாமல் திணறி விக்கெட்களை தொடர்ந்து இழந்து வந்த நிலையில், நடுப்பகுதியில் களமிறங்கிய கேபடன் சூரியக்குமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தால் அணியை மீண்டும் போட்டியில் முன்னிலைபடுத்தினார்.

suryakumar yadav அதிரடி ஆட்டம்

நேற்று மும்பையில் நடந்த ind vs usa போட்டியில் ஹீரோ யார் என்று கேட்டால் அது சூர்யகுமார் யாதவ் என்று சொன்னால் அது மிகையாகாது. போட்டியின் முக்கியமான தருணத்தில் அவர் விளையாடிய 84 ரன்கள் இந்திய ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.

ஆரபத்தில் இந்திய அணி 77/6 என்ற கடினமான நேரத்தில், அவர் நிதானமாகவும் அதே வேலையில் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார்.

  • அழுத்தமான சூழல்லுக்கு நடுவே சிங்களேஸ் + பவுன்டரிஸ்.
  • டைசி ஓவரில் வேகமாக ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் போர்ட்டை உயர்த்தினார்.
  • இந்த இன்னிங்ஸ் இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.

அவரின் இந்த ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் பலமாக மாற காரணமாக இருந்தது.

USA அணியின் பந்து வீச்சு

பலமான இந்திய அணி வீரர்கள் usa அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளால் எளிதில் தங்களது ஆட்டத்தை இழந்து வந்த இந்திய அணி ஆட்டகர்களால் ரன் ரேட் வேகமாக குறைந்து கொண்டே வந்தது. தொடர் விக்கெட் இழப்பு காரணமாக இந்தியா கடும் சிக்கலில் இருந்தது.

ஆனால், சூரியக்குமார் மற்றும் இந்திய அணியின் கடைசி வீரர்களின் பங்களிப்பால் 161 என்ற பலமான இலக்கை USA அணிக்கு இலக்காக வைக்க முடிந்தது.

USA அணியின் முயற்சியும் – தோல்வியும்

USA அணியி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், நடுபகுதியில் அணியின் முக்கிய கூட்டணி உருவானதால் ஆட்டம் சமநிலையில் இருந்தது.

  • அணியின் முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை சேர்த்தனர்.
  • ஒரு சில ஓவர்களில் அதிரடி பவுண்டரிகளை விளாசினார்கள்.
  • ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சாளர்ககளின் காடுமையான பந்து வீச்சால் ரன்கள் எடுக்க திணறியது.

இறுதி ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த முடியாத காரணத்தால் 132/8 மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சு

வெற்றியை எளிதில் அடைய இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கடுமையாக செயல்பட்டனர்.

  • ஆட்டத்தின் தொடக்கதிலே விக்கெட்களை எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
  • நடுப்பகுதியில் அதிக ரன்கள் போய்விடாத வண்ணம் அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது.
  • இறுதி ஓவரில் USA அணியை அதிரடி ஆட விடாமல் பந்து வீச்சால் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தது இந்தியா.

ind vs USA போட்டியின் திருப்புமுனை

போட்டியின் முக்கியாமன தருணத்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தால் இந்திய அணி ஒரு பலமான இலக்கை usa அணிக்கு கொடுக்க முடிந்தது. மேலும் USA அணியின் முக்கிய விக்கெட்கள் போட்டியின் நடுபகுதியில் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தின் போக்கு மாறி போனது கிட்டதட்ட இந்தியாவின் வெற்றி உறுதியாகி போனது.

புள்ளி பட்டியல் விவரம்

இந்தியாவின் இந்த முதல் வெற்றி மூலம் Group Stage – இல் நல்ல ஆரம்பத்தை பெற்றது. Net Run Rate மற்றும் புள்ளிகளில் நல்ல முன்னேற்றம் அடைந்து அடுத்த போட்டிக்கு ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அடுத்த போட்டியில் இந்தியாவின் ஆட்டம்

இந்த வெற்றியின் இந்திய அணி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த போட்டிகளில்

  • தொடக்க வீரர்களின் நிலையான மற்றும் அதிரடி ஆட்டம்
  • ஆட்டத்தின் நடுப்பகுதியில் நிலைத்த கூட்டணி
  • பந்தது வீச்சில் கட்டுபடுத்தும் ஆட்டம்

இவைகள் தொடர்ந்து செய்வது மூலம் இந்திய அணி அடுத்த ஆட்டதிலும் எளிதில் வெற்றியை காண எளிதாக இருக்கும்.

ind vs USA Highlights (ஆட்டத்தின் சுருக்கம் )

india vs usa போட்டியில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்த போதிலும் சூர்யகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டம் மற்றும் பந்து வீச்சாளர்களின் கட்டுப்பாடு இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது. T20 Worldcup 2026 இந்தியா தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Rating