சீயான் விக்ரமின் மகான் படத்தின் பாடல்
Last Updated on January 28, 2022 by Dinesh
சீயான் விக்ரமின் மகான் படத்தின் கலக்கலான இரண்டாவது பாடல் இன்று இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது..

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் மகான்.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் சூறையாட்டம் யுட்யூப் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது மகான் திரைபடத்தின் இரண்டாவது பாடலாக எவண்டா எனக்கு கஸ்டடி என்ற பாடலை மகான் திரைப்பட குழு இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
பாடலாரிசியர் விவேக் எழுதி இருக்கும் இப்பாடலை மகான் திரைபடத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை பாடியுள்ளார்.. எவண்டா எனக்கு கஸ்டடி பாடல் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்பாடலை வெளியிட்டு உள்ளனர் மகான் படக்குழுவினர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்கா, சிம்ரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் மகான் திரைப்படம் கன்னடத்தில் மகா புருஷன் என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாக உள்ளது.
சீயான் விக்ரம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபடும் மகான் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நேரடியாக அமசான் பிரைமீல் வெளியாக உள்ளது.
சீயான் விக்ரமின் மகான் படத்தின் எவண்டா எனக்கு கஷ்டடி கலக்கலான பாடல் கீழே கொடுக்கபட்டுள்ளது…