கீர்த்தி சுரேஷ் டொவினோ தாமஸ்-இன் வாஷி
Last Updated on January 21, 2022 by Dinesh
கீர்த்தி சுரேஷ் டொவினோ தாமஸ் ஆகியோர் இணைந்து நடிக்கும் வாஷி திரைபடத்தின் படபிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைபடங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மலையாளத்தில் வாஷி என்ற படத்தில் நடித்து வந்தார்.
தற்போது இப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் கீர்த்தி சுரேஷ் வாஷி படக்குழுவினர் உடன் எடுத்து கொண்ட புகைபடங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வருகிறது.
இறுதியாக தமிழில் கடந்த தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் திரைக்கு வந்த அண்ணாத்த திரைபடத்தில் நடித்து இருந்தார்..
இதை தவிர நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சர்க்காரு வரி பாட, போலா சங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து தமிழில் இயக்குனர் செல்வ ராகவனுடன் இணைந்து நடித்த சாணி காகிதம் திரைபடத்தின் படபிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபடும் சாணி காகிதம் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.
இது மட்டுமின்றி தெலுங்கில் தசரா என்ற புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் தற்போது தனது சிறு வயது பள்ளி நண்பரான இயக்குனர் விஷ்ணு ராகவ் இயக்கும் முதல் திரைபடமான வாஷி திரைபடத்தில் நடித்து முடித்து உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் வாஷி திரைபடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிகர் டொவினோ தாமஸ் நடித்து உள்ளார். இது குறித்து வாஷி திரைபடத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் கூறுகையில்,
என் சிறு வயது நண்பரான விஷ்ணு ராகவ் இயக்கும் முதல் படத்தில் நான் இணைந்து நடித்து இருப்பது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.
மேலும் படத்தினை காண்பதற்க்கு ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்து இருக்கும் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த,
மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிபிடத்தக்கது.