சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கிச்சா சுதீப் புகழாரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கிச்சா சுதீப் புகழாரம் வைரலாக பரவி வரும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கிச்சா சுதீப் புகழாரம்
rajinikanth & kiccha sudeep

கன்னட நடிகரான கிச்சா சுதீப் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கிச்சா சுதீப் நான் ஈ மற்றும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த புலி திரைபடத்திலும் நடித்திருக்கிறார்..

தற்போது, விக்ராந்த் ரோனா என்ற கன்னட படத்தில் படித்து வருகிறார் கிச்சா சுதீப். இப்படத்தினை இயக்குனர் அணுப் பண்டாரி எழுதி இயக்குகிறார்..

கன்னட மொழியில் தயாராகும் விக்ராந்த் ரோனா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, அரபிக், ரஷ்யன், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது..

shalini arts invenio films india உடன் இணைந்து நடிகர் கிச்சா சுதீபின் தயாரிப்பு நிறுவனமான kichacha creations நிறுவனம் Vikrant Rona திரைபடத்தை தயாரிக்கிறது..

விக்ராந்த் ரோனா படத்திற்க்கு இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதய்நிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் திரைபடத்திற்கும் நடிகர் விதார்த் நடித்த குரங்கு பொம்மை திரைபடத்திற்கும் இசையமைத்துள்ளார்..

மேலும், படத்தில் ஒளிப்பதிவாளராக வில்லியம் டேவிட் மற்றும் எடிட்டராக ஆஷிக் குசுகொல்லி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

சமீபத்தில், vikrant Rona படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கிச்சா சுதீப் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை புகழ்ந்து பேசியது வைரலாக பரவி வருகிறது..

அந்நிகழ்வில் பேசிய கிச்சா சுதீப் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் நிற்க்கும் ஒரு எளிமையான மனிதர் ரஜினிகாந்த் அவரை போல நான் யாரையும் பார்த்ததில்லை நான் அவருடைய ஆளுமையின் மிக பெரிய ரசிகன் என நடிகர் ரஜினிகாந்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Exit mobile version