Tamil CinemaUpdates

பொங்களுக்கு திரைக்கு வருமா மாஸ்டர்? ரசிகர்கள் ஆர்வம்…

Last Updated on May 28, 2021 by Dinesh

பொங்களுக்கு திரைக்கு வருமா மாஸ்டர்? என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில் படக்குழு இன்று அப்டேட் கொடுத்துள்ளது.

'மாஸ்டர்' ரிலீஸ் பற்றிய ருசிகர தகவல் வெளியாகியுள்ளது
Master

கடந்தாண்டு வெளியான ‘பிகில்’ திரைபடத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படமான ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு தேதி நாள் முதலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை உருவாக்கி வருகிறது.

அது மட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனராஜ் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே மாநகர்ம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக இவர் இயக்கிய. கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ஹீரோயின் மற்றும் பாடல்கள் என ஏதும் இன்றி கதையை மட்டுமே மையமாக கொண்டு படத்தின் மீதான இருந்த எதிர்பார்பை பூர்த்தி செய்திருப்பார்.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு படமாக்கபட்டடு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று படமும் பெரிய வெற்றி படமாக அவருக்கு அமைந்தது.

பொங்களுக்கு திரைக்கு வருமா மாஸ்டர்? ரசிகர்கள் ஆர்வம்…

இந்த வெற்றியை தொடர்ந்து தனது மூன்றாவது படத்தில் விஜய்யை வைத்து இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களை தொடர்ந்து சாந்தனு பாக்கியராஜ், ஆன்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்..

இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கும் அயலான்…

ரிலீஸ் ஒத்திவைப்பு

இத்திரைபடம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வார இருந்த நிலையில் கொரோனா அச்சுருத்தல் காரணமாக திரை அரங்குகள் மூடபட்டது.

இதன் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதிகளை அறிவிப்பு ஏதும் இன்றி தள்ளி போட்டது படக்குழு..

சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு…

தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு திரை அரங்குகளில் 50% சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் மாஸ்டர் திரைஅரங்கில் வெளியாகுமா அல்லது ஓடிடி தளத்தில் வெளியாகுமா என சந்தேகம் நிலவி வந்தது..

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் மாஸ்டர் படத்தை திரை அரங்கில் வெளியிட தான் நாங்கள் விரும்புகிறோம்.

நடிகர் விஜய் தனது ரசிகர்களின் எதிப்பார்ப்புகளுக்காக திரைஅரங்கில் தான் படத்தை வெளியிட வேண்டும் என உறுதியாக எங்களிடம் தெரிவித்து இருக்கிறார் என தெரிவித்து இருந்தார்..

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

இதை தொடர்ந்து தற்போதும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பற்றிய வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. மாஸ்டர் படம் பொங்களுக்கு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக போவதாக செய்திகள் வெளிவந்தம் இருந்தன இதனை படக்குழு தற்போது ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது..

பொங்களுக்கு திரைக்கு வருமா? மாஸ்டர் என ரசிகர்களுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாங்கள் மாஸ்டர் திரை அரங்கில் வெளியாவதையே விரும்புகிறோம் விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.

itகணை தொடர்ந்து ரசிகர்கள் master என்ற ஹஸ்டாக் உருவாக்கி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !