NewsTamilnadu

கால்பந்து வீரர் பீலே மறைவிற்க்கு ஏஆர் ரஹ்மான் டெடிகேட் செய்த பாடல் இதான் !

Last Updated on December 30, 2022 by Dinesh

கால்பந்து விளையாட்டின் நட்சத்திரமாக விளங்கிய பீலே உடல் நல குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிர்ழந்தார்..

brazil footballer pele
pele

கால்பந்தாட்டத்தில் உலகையே திரும்பி பார்க்க வைத்த பீலே கடந்த 1940 இல் அக்டோபர் 23 ஆம் தேதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்..

இவரது தந்தை தொழில் முறையில் ஒரு கால்பந்தாட்ட வீரராக இருந்துள்ளார்.

கால்பந்து வீரர் பீலே

பீலேவுக்கு நான்கு வயது இருக்கும் அவரது தந்தைக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டத்தின் காரணமாக தனது கால்பந்தாட்ட பணியை கைவிட நேரிட்டது..

பீலேவுக்கு நான்கு வயது நடைபெற்று இருக்கும் வேலையில் இவர்களது குடும்பம் பவுரு என்ற பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

அப்போது, பீலே அந்த பகுதியில் இருந்த சக சிறு வயது நண்பர்களுடன் சேர்ந்து கால்களில் அணியும் காலுறைகளில் பேப்பர்களை சுருட்டி கால்பந்து போன்று செய்து காலை முதல் மாலை நண்பர்களுடன் விளையாடி வந்துள்ளார்..

footballer pele dies
pele

பீலேவுக்கு கால்பந்தின் மீதான ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை பவுரு நகரத்தில் இருக்கும் கால்பந்து அணியில் சேர்த்து விட்டுள்ளார். அதன் பிறகு உலகே திரும்பி பார்க்கும் வகையில் கால்பந்தில் பல சாதனைகளை படைத்துள்ளார்..

தனது 22 வருட கால்பந்து பயணத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து மிரட்டியிருக்கிறார் பீலே.

footballer pele news
pele

தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவது, தொடர்ந்து மூன்று முறை உலக கோப்பை வென்ற ஒரே வீரர் என பல உலக சாதனைகளை பெற்றுள்ளார்..

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிறுநீரக நோயுடனும், வேறு சில தீவிர உடல் நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த பீலே தனது 82 வயதில் காலமானார்..

பீலேவின் மறைவு உலக கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவிற்க்கு தமிழ்நாடு மற்றும் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்..

அந்த வகையில் இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் Ginga என்ற ம்யூசிக் பாடலை பீலேவுக்கு டெடிகேட் செய்வதாக பாடலை பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்..

பீலே மற்றும் ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது அதிரடி இசையில் வலம் வரும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான். கடந்த 2016 இல் கால்பந்து வீரர் பீலே நடித்த pele birth of a legend படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார்..

இயக்குனர்கள் ஜெஃப் ஜிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் ஆகியோர் இணைந்து இயக்கிய pele birth of a legend திரைப்படம் உலகம் முழுவதும் 2.3 மில்லியன் வசூலை அள்ளியது..

இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம் பெற்ற ginga என்ற ம்யூசிக் வீடியோ பாடலை தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பீலேவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !