SA vs Ind : களத்தில் வெளுத்து வாங்கிய தவான்

SA vs Ind : களத்தில் வெளுத்து வாங்கிய ஷிகர் தவான் இன்றைய போட்டியில் சதம் அடிப்பாரா என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது..

SA vs Ind : களத்தில் வெளுத்து வாங்கிய தவான்
ind vs sa

தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் தொடர்கள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை விளையாட இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டது. இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவி டெஸ்ட் தொடரை இழந்தது..

இதை தொடர்ந்து, இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ( South Africa vs India ) அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது..

இந்த போட்டி நடைபெறும் முன்பு இரு அணிகளின் கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் போடபட்டது. இதில் முதலில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட முடிவு செய்தது..

தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக முதலில் களமிறங்கிய துவக்க ஆட்டக்காரர்கள் குயின் டி காக் மற்றும் ஜன்னிமான் மாலன் உள்ளிட்டோர் விளையாட தொடங்கினர்.

இந்தியா அணி வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய பந்தில் ஜன்னெமன் மாலன் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் விக்கெட்டை 4 வது ஓவரிலே பறிகொடுத்தது.

இதை தொடர்ந்து அணியின் கேப்டன் டெம்பா பவுமா களமிறக்கபட்டார். டி காக் மற்றும் பாவுமா ஆகியோர் நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்க்கதொடங்கினார்கள்.

இவர்களில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் தேம்பா பாவுமா 143 பந்துகளில் 110 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தேம்பா பாவுமா மற்றும் டெஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் ஆகியோரின் ஆதிரடி ஆட்டத்தால்அணியில் ரன்கள் குவிக்கபட்டன.

குறிப்பாக இதில் டெஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் அதிரடியாக ஆடி 96 பந்துகளுக்கு 129 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 296 ரன்களை எடுத்தது.

297 ரன்களை இழக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான்.

இந்திய அணி 46 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷிகர் தவான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி அரை சதத்தை எட்டினார்.

SA vs Ind : களத்தில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 79 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

Exit mobile version