Last Updated on November 9, 2022 by Dinesh
ஐஸ்வர்யா ராஜேஷ் பெண் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியானது..

சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம், சமந்தா நடிப்பில் வெளிவந்த யு டர்ன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன..
இதை தொடர்ந்து த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன்னா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்க தொடங்கினர்.. பெண்களின் போராட்ட குணங்களை மையபடுத்தி சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை பாராட்டவும், வரவேற்க்கவும் தவறுவதில்லை..
அந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த டிரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெண் கால் டாக்ஸி ஓட்டுனராக நடித்திருக்கிறார்..
நடுத்தர குடுபம்த்தை சேர்ந்த சாமானிய பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெண் கால் டாக்ஸி ஓட்டுனர் பணியை விரும்பி செய்து வருகிறார்.
ஒரு பெண் தன் பணியின் போது ஏற்படும் இன்னல்கள், போராட்டங்களை குறித்து மையாக வைத்து எடுக்கபட்ட திரைபடமாக தெரிகிறது..
டிரைவர் ஜமுனா படத்தின் டிரைலர் ஏற்கனவே யுட்யூப் தளத்தில் வெளியாகி 1.4 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து வருகிறது.
மேலும் இப்படத்தில் முதல் பாடலாக cool dude என்ற ப்ரோமோ பாடலும் வெளியாகிருந்தது..
இதனை தொடர்ந்து தற்போது டிரைவர் ஜமுனா படத்தின் இரண்டாவது பாடலாக சக்தி கூத்து என்ற பாடல் இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது..