பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர்  மிர்னாலினி ரவி

பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அங்கயே முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்

டிக்டாக் மூலம் இணையவாசிகளிடம் மிகவும் பிரபலமாணவர் மிர்னாலினி

தற்போது தமிழ் சினிமாவில் கியூட் நடிகையாக வலம் வருகிறார்

மிர்னாலினி டிக்டாக்கில் மிகவும் பிரபலமான சமயத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா மிர்னாலினியின் டிக்டாக் வீடியோக்களை பார்த்து பிடித்து போக,

உடனே சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கு மிர்னாலினி அழைக்கபட்டார்

ஆடிஷனில் தேர்வான மிர்னாலினி சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்