கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ராஷ்மிகா
கடந்த 2016-இல் முதன் முதலில் கன்னட திரைபடத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்
ராஷ்மிகா மந்தன்னாவின் முதல் திரைப்படம் க்ரீட்டிக் பார்ட்டி என்ற கன்னட படம்
க்ரீட்டிக் பார்ட்டி படத்தை தொடர்ந்து கன்னடத்தில் அடுத்தடுத்த இரண்டு படங்களில் நடித்தார்
2018-இல் சலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமா துறையில் நுழைந்தார்
தெலுங்கில் அடுத்தடுத்து வெளியான கீதா கோவிந்தம், தேவதாஸ் உள்ளிட்ட நல்ல வரவேற்பை பெற்றது
தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்த ராஷ்மிகா 2021-இல் தமிழில் அறிமுகமானார்
ராஷ்மிகாவின் முதல் தமிழ் திரைப்படம் கார்த்தியுடன் நடித்த சுல்தான்
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா தற்போது ஹிந்தி சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்
ஹிந்தியில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ராஷ்மிகா
இதற்கிடையில் தமிழில் தளபதி விஜய்யுடன் நடித்து வருகிறார்
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா
தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள ராஷ்மிகாவின் புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது