Site icon natshathiram

அதிர்ச்சியில் கோலிவுட்! லீக்கானது விஜய்யின் ‘ஜனநாயகன் படம்’- இதற்க்கு பின்னால் இருக்கும் சதி என்ன?

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக் என்றால் அது தளபதி விஜய் மற்றும் இயக்குனர் எச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தான்.

விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் தியேட்டர் ரிலீஸுக்காக (ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி ) காத்திருக்கும் வேளையில், நேற்று சமூக வலைதளங்களில்

ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் வெளியான நிலையில் இன்று காலை விஜய் ரசிகர்கள்களுக்கு ஒரு இடி போன்ற செய்தி வந்துள்ளது.

vijay

படத்தின் முழு எச்டி பிரிண்ட் (HD Print) இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது. இது ஒரு எதேச்சையான லீக் தானா அல்லது திட்டமிட்ட சதியா? விரிவாகப் பார்ப்போம்.

ஷாக் கொடுத்த டெலிகிராம் மற்றும் பைரசி தளங்கள்:

பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் தான் பைரசி இணையதளங்களில் வெளியாகும். அதிலும் முதலில் தியேட்டர் பிரிண்ட் என சாதாரண வீடியோ குறைந்த குவாலிட்டி கொண்ட படமாக வெளியாகும்.

பின்னர் கிட்டதட்ட 2 வாரங்கள் கழித்து ஒரிஜினல் பிரிண்ட் என முழு எச்டி பிரிண்ட் படம் வெளியாகும். ஆனால் ‘ஜன நாயகன்’ படத்தைப் பொறுத்தவரை, இன்னும் அதிகாரப்பூர்வமாக தியேட்டர்களுக்கே வராத நிலையில்,

எப்படி முழு படமும் வெளியானது என்பது தான் பெரும் மர்மமாக உள்ளது. இன்று காலை சுமார் 10 மணி அளவில் டெலிகிராம் குரூப்களில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.

ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி – கவலையில் KVN புரொடக்ஷன்ஸ்:

சுமார் ₹500 கோடி பட்ஜெட்டில், சர்வதேச தரத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் இசை, எச். வினோத்தின் விறுவிறுப்பான திரைக்கதை என படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

பொதுவாக இவ்வளவு பெரிய பட்ஜெட் படங்கள் லீக் ஆனால், அது தியேட்டர் வசூலை 30% முதல் 40% வரை நேரடியாக பாதிக்கும்.

இது தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், விநியோகஸ்தர்களுக்கும் (Distributors) மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.

அரசியல் சதி பின்னணி? – ஒரு அலசல்:

விஜய் அவர்கள் தனது தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சியின் மூலம் அரசியலில் தீவிரமாக இறங்கி இருப்பதால், ‘ஜன நாயகன்’ படம் வெறும் சினிமா மட்டுமல்ல, அது ஒரு அரசியல் ஆயுதமாகவும் பார்க்கப்பட்டது.

படத்தின் ரிலீஸைத் தடுத்தால் அவருடைய அரசியல் பிம்பத்தை பாதிக்கலாம் என நினைக்கும் சில விஷமிகளின் வேலையாக இது இருக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்சார் போர்டில் படம் சிக்கி இருந்த நேரத்தில் இது நடந்தது கூடுதல் சந்தேகத்தை எழுப்புகிறது.

சட்ட ரீதியான நடவடிக்கை (Strict Legal Action):

தயாரிப்பு நிறுவனம் தற்போது சைபர் கிரைம் போலீஸாரை அணுகியுள்ளது. அவர்கள் கூறியுள்ளதாவது: “படம் கசிந்த மூலாதாரத்தை (Source) நாங்கள் நெருங்கிவிட்டோம்.

இந்த லிங்குகளை பகிர்வவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கிரிமினல் வழக்கு பதியப்படும். ஏற்கனவே நூற்றுக்கணக்கான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளன.”

ஏன் நீங்கள் லீக் ஆன படத்தை பார்க்கக் கூடாது?

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது பல குடும்பங்களின் வாழ்வாதாரம். குறிப்பாக தளபதியின் கடைசி படம் என்பதால், அதை திரையில் பார்த்து கொண்டாடுவது தான்,

அவருக்கு நாம் கொடுக்கும் உண்மையான மரியாதை. #StopPiracy ஹேஷ்டேக் மூலம் திரையுலகிற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

Exit mobile version